
tamil
Ettuthogai Pathupattu
0 Reviews
முனைவர் சு.அனுசுயாதேவி தமிழ் இலக்கியத்தில் வலுவான பின்னணி கொண்ட ஒரு திறமையான கல்வியாளர் ஆவார் .தமிழ் இலக்கணம், சங்க கால இலக்கியம் ,இக்கால இலக்கியம், நவீன இலக்கியம் ஆகியவற்றில் தமிழ் எழுத்தில் திறமை பெற்றவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் அனுபத்துடன் தற்போது கோவில்பட்டியில் உள்ள கோ. வெங்கடாசாமியின் நாயுடு கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். முனைவர் சு. அனுசுயாதேவி முனைவர் பட்டம் பெற்றவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சங்க கால வாழ்வியல் மதிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் தனது ஆய்வியல் நிறைஞர் ,முதுகலை பட்டத்தையும், பெற்றார். தனது படிப்பு முழுவதும் ஒரு நிலையான கல்வித் திறனை வெளிப்படுத்தினார். தமிழ் இலக்கியம் தொடர்பான 45க்கும் மேற்பட்டுள்ள ஆய்வு கட்டுரைகளை ஐ எஸ் என் ,ஐ எஸ் பி என், இதழ்களில் வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் பெரும்பாலும் இலக்கிய நுணுக்கங்களையும் பல்வேறு கலாச்சார செயல்களில் பெண்களின் போராட்டங்களையும் , ஆய்வதாக அமைகின்றன. பொது நிகழ்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டு காலம் பணியாற்றியுள்ளார். மேலும் புதுமையான கற்பித்தல் முறைகளும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் விமர்சன சிந்தனையை வளர்ப்பதில் அவரது நோக்கமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது . மேலும் தமிழில் சிறப்பாக பேசும் திறமை கொண்டவர். இலக்கண இலக்கங்களை கற்பிப்பதில் ஒரு நல்ல சிறந்த ஆசிரியராக திகழ்கின்றார்.
